×

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ₹9 லட்சம் காப்பர் வயர் திருட்டு

ஸ்பிக்நகர், மே 18:தூத்துக்குடி என்டிபிஎல் அனல்மின் நிலையத்தில் ₹9.34 லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்நிலையத்தில் திறந்தவெளி குடோனில் இருந்த 3,887 மீட்டர் காப்பர் வயர்களை மர்ம நபர்கள் திருடிசென்றனர். இதன் மதிப்பு ₹9லட்சத்து 34ஆயிரத்து 700 ஆகும். இதுகுறித்து என்டிபிஎல் அனல்மின் நிலைய செயற்பொறியாளர் ரமேஷ் (57) தெர்மல்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தெர்மல் இன்ஸ்பெக்டர் பொறுப்பு செந்தில்வேல் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காப்பர் வயர்களை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ₹9 லட்சம் காப்பர் வயர் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi power station ,Spignagar ,Thoothukudi NTPL power station ,Thoothukudi NTPL Thermal Power ,Station ,Thoothukudi Thermal Power Station ,Dinakaran ,
× RELATED பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது