×

பம்புசெட் குழாய்களை திருடிய வாலிபர் கைது

அரூர், மே 18: கம்பைநல்லூர் அருகே கெலவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். விவசாயியான இவர், தனது தோட்டத்தில் பம்பு செட் குழாய் அமைத்திருந்தார். கடந்த 11ம் தேதி தோட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் 2 பேர், பாசன குழாய்களை திருடி மூட்டைகளில் கட்டிக் கொண்டிருந்தனர். அப்போது, தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்ற கண்ணனை கண்டு, குழாய்களை போட்டு விட்டு மர்ம நபர்கள் ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், கம்பைநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து, குழாய் திருடியதாக அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன்(32) என்பவரை கைது செய்தனர். மேலும், அவரது கூட்டாளி சிவா(35) என்பவரை தேடி வருகின்றனர்.

The post பம்புசெட் குழாய்களை திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Pambuset ,Aroor ,Kannan ,Kelavalli ,Campinallur ,
× RELATED 517 பள்ளிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் விநியோகம்