×

பாஜ வேட்பாளர் அபிஜித்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம், தம்லுக் தொகுதியில் கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியான அபிஜித் கங்கோபாத்யாய் பாஜ வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் இவர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினார். இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தது. இந்த புகாரின்பேரில் பாஜ வேட்பாளர் அபிஜித் கங்கோபாத்யாய் விளக்கமளிக்க கோரி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

The post பாஜ வேட்பாளர் அபிஜித்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Election Commission ,BJP ,Abhijith ,New Delhi ,Abhijit Gangopadhyay ,Calcutta High Court ,West Bengal ,Tamluk ,Trinamool Congress ,President ,Chief Minister ,Mamata Banerjee ,
× RELATED மக்களவைத் தேர்தல் பரப்புரை தொடர்பாக...