×

சர்வாதிகாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது: கெஜ்ரிவால் காட்டம்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் ஆம் ஆத்மி தேர்தல் பிரசார கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அப்போது பேசிய கெஜ்ரிவால், ‘‘நமது நாட்டில் நடந்து வரும் சர்வாதிகார ஆட்சியை ஏற்க முடியாது. கடந்த 75 ஆண்டுகளில் எதிர்கட்சி தலைவர்களை சிறையில் அடைக்கும் இதுபோன்ற ஒரு காலகட்டத்தை இந்தியா பார்த்தது கிடையாது. ரஷ்யாவில் உள்ளது போல் இந்தியாவின் நிலைமை மாறி வருகிறது. ரஷ்யாவில் அனைத்து எதிர்கட்சி தலைவர்களும் சிறைக்கு அனுப்பப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர். இந்தியாவில் என்னை சிறையில் அடைத்தனர். மணீஷ் சிசோடியாவை சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கப்பட்டது. திரிணாமுல் காங்கிரசுக்கு இடையூறு ஏற்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டு அமைச்சர் சிறையில் அடைக்கப்படுகிறார். எல்லோரையும் சிறையில் அடையுங்கள். ஒரு கட்சி ஒரு தலைவர் மட்டும் இருப்பார். ஆனால் ஜனநாயகம் உயிரோடு இருக்காது. இதுபோன்ற நிகழ்வதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது” என்றார்.

The post சர்வாதிகாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது: கெஜ்ரிவால் காட்டம் appeared first on Dinakaran.

Tags : Kejriwal Kattam ,Chandigarh ,Delhi ,Chief Minister ,Kejriwal ,Aam Aadmi Party ,Amritsar, Punjab ,
× RELATED டெல்லி உள்ளிட்ட 9 மாநிலங்களில் கடும்...