×

இத்தாலி ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் இன்று சபலெங்கா-இகா மோதல்

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் நம்பர் 1 இகா ஸ்வியாடெக், 2வது ரேங்க் வீராங்கனை அரினா சபலெங்கா மோதுகின்றனர். அரையிறுதியில் அமெரிக்காவின் கோகோ காஃப் உடன் மோதிய இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வென்று பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் டேனியலி கோலின்ஸை எதிர்கொண்ட அரினா சபலெங்கா 7-5, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான பைனலில் ஸ்வியாடெக் – அசலெங்கா இன்று மோதுகின்றனர்.

The post இத்தாலி ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் இன்று சபலெங்கா-இகா மோதல் appeared first on Dinakaran.

Tags : Sabalenka ,Iga ,Italy Open ,Rome ,Ika Sviatek ,Arina Sabalenka ,Italian Open tennis ,Ika Swiatek ,Poland ,Coco Goff ,America ,
× RELATED இத்தாலி ஓபன் டென்னிஸ் சபலெங்கா முன்னேற்றம்