×

பாலியல் தொல்லை வழக்கில் 3 ஆண்டு தண்டனை முன்னாள் சிறப்பு டிஜிபியை கைது செய்ய தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாக இருந்தவர் ராஜேஷ் தாஸ் . இவர் கடந்த 2021ம் ஆண்டு பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த விழுப்புரம் நீதிமன்றம், ராஜேஷ் தாசுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எம்.திரிவேதி மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் தமிழ்நாடு போலீஸ் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை மாதத்துக்கு ஒத்தி வைத்தனர். அடுத்த விசாரணை வரையில் ராஜேஷ் தாசை கைது செய்ய தடை விதித்தனர்.

The post பாலியல் தொல்லை வழக்கில் 3 ஆண்டு தண்டனை முன்னாள் சிறப்பு டிஜிபியை கைது செய்ய தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : DGP ,Supreme Court ,New Delhi ,Rajesh Das ,Tamil Nadu Police ,Viluppuram Court ,Dinakaran ,
× RELATED யூடியூபர் சங்கர் வழக்கு விவகாரம்;...