×

கட்சிக்கு வரும்போது ஒன்றுமில்லாமல் வந்தார் பாஜ மாநில நிர்வாகி ரூ.1,200 கோடி சுருட்டல்? ஆடியோ வைரல்

நாகர்கோவில்: தமிழக பாஜ மாநில நிர்வாகி மீது ரூ.1,200 கோடி சுருட்டியதாக ஆடியோ வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த மாதம் 19ம் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சி 19 தொகுதிகளில் போட்டியிட்டது. கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் பாஜ சின்னத்தில் 4 தொகுதிகளிலும் போட்டியிட்டனர். பாஜவினர் தேர்தலில் யாருக்கும் பணம் தர மாட்டார்கள் என்று கட்சி தலைவர் அண்ணாமலை மேடைக்கு மேடை பேசி வந்தார். ஆனால் அவர் போட்டியிட்ட கோவை நாடாளுமன்ற தொகுதியில் பணம் வினியோகம் செய்ததாக வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இதே போல் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் எம்எல்ஏவின், உதவியாளர் சென்னையில் இருந்து நெல்லைக்கு ரயிலில் கொண்டு சென்ற ரூ.4 கோடி சிக்கியது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

அதேநேரத்தில், தேர்தல் செலவுக்காக அந்தந்த தொகுதி பொறுப்பாளர்களிடம் பாஜ சார்பில் பணம் வழங்கப்பட்டது. அவர்கள் பணத்தை முறையாக பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு தேர்தல் முடிந்ததும் எதிரொலிக்க தொடங்கியது. பாஜ போட்டியிட்ட தொகுதிகளில் பாஜ நிர்வாகிகள் பணத்தை சுருட்டிக் கொண்டார்கள் என பாஜ மேலிடத்திலும் புகார் செய்யப்பட்டுள்ளதோடு, தமிழ்நாடு முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர். பணம் சுருட்டல் தொடர்பாக பாஜ நிர்வாகிகளிடையே சில இடங்களில் வெட்டு குத்து சம்பவம் நடந்து உள்ளது. பாஜ நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாஜ தொண்டர்கள் மத்தியில் ஆடியோ ஒன்று நேற்று காலை முதல் வைரலாகி வருகிறது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் ராஜேந்திர நாயுடு என தனது பெயரையும், மொபைல் நம்பரையும் கூறி அறிமுகம் செய்து கொள்கிறார். பின்னர், நரேந்திர மோடி, அமித்ஷா மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு ஆங்கிலத்தில் தான் அனுப்பிய புகாரை தமிழில் மொழி பெயர்த்து கூறுகிறேன் என தொடங்குகிறது. அதில், குமரியை சேர்ந்த பாஜ நிர்வாகி கட்சிக்கு வரும்போது ஒன்றுமில்லாமல் வந்தார். ஆனால் தற்போது ஆயிரம் கோடிக்கு அதிபதி.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, மேலும் ரூ.200 கோடியை சுருட்டி விட்டார். மொத்தம் ரூ.1,200 கோடி சேர்த்துள்ளார். கடந்த எம்எல்ஏ தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் அதிகளவு கொள்ளை அடிக்கவில்லை. கடந்த 2019 தேர்தலில் அதிக பணம் சுருட்டியுள்ளார். கொள்ளை அடித்த பணத்தை மேல்மட்ட அளவில் பிரித்துக் கொண்டனர். ஒரு சில மாவட்ட தலைவர்களுக்கு பணம் அளித்துள்ளார். இப்போது அந்த பணத்தை வங்கியிலிருந்து எடுக்கவில்லை. வங்கியில் உள்ளது. சில நாட்கள் கழித்து அமைதி ஏற்பட்ட பின்னர், அது அவருக்கு திரும்பி சென்று விடும். எரிகிற வீட்டில் பிடுங்குவது போல் எந்தெந்த வழியில் கொள்ளை அடிக்க முடியுமோ அப்படி அடித்துள்ளார். கீழ்மட்ட அளவில் கட்சியை வளர்க்க முயற்சிக்கவில்லை.

கட்சி வளர்ச்சி பற்றி அக்கறை இல்லை. பகல் வேஷம் போடுகிறார். எல்லோருக்கும் திருட்டு வேலை செய்ய பயிற்சி அளித்து வைத்துள்ளார். 90 சதவீதம் பாஜ கேடர்ஸ் நல்ல வொர்க்கர்கள். அவர்களை அவர் வேலை செய்ய விடவில்லை. நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகிக்கு சீட் தரவில்லை என்பதால், அங்கு பாஜ வேட்பாளர் ரமேஷூக்கு எதிராக செயல்பட்டார். அதுபோல் கிருஷ்ணகிரியில் நரசிம்மன் ஜி கேன்டிடேட். அங்கு அவருக்கு வேண்டிய வேறு யாரோ சீட் கேட்டுள்ளனர். இதனால், அவருக்கும் எதிராக வொர்க் பண்ணியிருக்கிறார்கள். அங்கு ரூ.3 கோடி கையாடல் செய்துள்ளனர்.

அப்புறம் திருவள்ளூர் ஈஸ்ட். அங்கு ரூ.6 கோடி சுருட்டியுள்ளதாக யூடியூப்பில் பார்த்ேதன். இதுபோல் பல மாவட்டங்களில் இருந்து புகார்கள் வந்துள்ளன. கட்சி கேடர்கள் அதிருப்தியில் உள்ளனர். மாநில தலைவர் உள்பட தேசிய தலைவர்கள் தேர்தல் வேலையில் பிசியாக உள்ளனர். இவர்கள் கூத்தாடி கொண்டுள்ளனர். இவர்கள் சொகுசு கார்கள், பங்களாக்கள் வாங்கி குவித்துள்ளனர். நீங்கள் சம்பாதியுங்கள். வேலை செய்யும் கட்சி அடிமட்ட தொண்டர்களுக்கும் கோடிகளில் இல்லாவிட்டாலும், சில லட்சங்கள் கொடுத்து விட்டு கொள்ளை அடியுங்கள். கட்சி அடிமட்ட தொண்டர்கள் தினக்கூலிகள். அவர்கள் வயிற்றில் அடிக்காதீர்கள். திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் நான் பார்த்துள்ளேன். கட்சியை அவர்கள் சொத்து போல் பார்க்கின்றனர்.

எனவே, முக்கிய நிர்வாகியை சஸ்பென்ட் செய்து விட்டு, கொள்ளை அடித்தவர்கள் மீது விசாரணை கமிஷன் வைத்து கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம். விரைவில் கொள்ளை அடித்தவர்கள் நீக்கப்படுவார்கள். கட்சி வேலை செய்பவர்களுக்கு எதிர்காலம் உள்ளது. இவர்கள் ஆட்டம் நீடிக்காது. இவ்வாறு அந்த ஆடியோ நீள்கிறது. தற்போது இந்த ஆடியோ குமரியில் வேகமாக வைரலாகி வருகிறது. இதனால், கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொள்ளை அடித்த பணத்தை மேல்மட்ட அளவில் பிரித்துக் கொண்டனர். ஒரு சில மாவட்ட தலைவர்களுக்கு பணம் அளித்துள்ளார். இப்போது அந்த பணத்தை வங்கியிலிருந்து எடுக்கவில்லை. வங்கியில் உள்ளது. கிருஷ்ணகிரியில் ரூ.3 கோடி கையாடல் செய்துள்ளனர். திருவள்ளூரில் ரூ.6 கோடி சுருட்டியுள்ளனர். எல்லோரையும் திருட்டு வேலை செய்ய பயிற்சி அளித்து மாநில நிர்வாகி வைத்துள்ளார்.

The post கட்சிக்கு வரும்போது ஒன்றுமில்லாமல் வந்தார் பாஜ மாநில நிர்வாகி ரூ.1,200 கோடி சுருட்டல்? ஆடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Nagercoil ,Tamil ,Nadu ,Tamil Nadu ,Bharatiya Janata Party ,Audio ,Dinakaran ,
× RELATED தேர்தல் முடிவுக்குப் பிறகு மேலே...