×

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கு பிடிவாரன்ட்

நிலக்கோட்டை: வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நிலக்கோட்டை கோர்ட் உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எஸ்ஐயாக பணி புரிந்தவர் கேத்ரின் மேரி. இவர் தற்போது கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள துடியலூர் மகளிர் காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணிபுரிந்து வருகிறார்.

இவர் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது நிலக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் 3 வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்த வழக்குகள் சம்பந்தமாக இவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. அதேபோல் நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, விருவீடு ஆகிய காவல் நிலையங்களில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, தற்போது கோவை மாவட்டம் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இவர், வத்தலக்குண்டு, விருவீடு, நிலக்கோட்டை காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள 6 வழக்குகளில் நிலக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. இந்த வழக்குகளில் ஆஜராகாத இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, எஸ்ஐ கேத்தரின் மேரி ஆகியோருக்கு நிலக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் நல்லகண்ணன் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

The post வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கு பிடிவாரன்ட் appeared first on Dinakaran.

Tags : SI ,Nilakottai ,Nilakottai Court ,Kathryn Mary ,Ammayanayakanur Police Station ,Nilakottai, Dindigul District ,Coimbatore ,Dinakaran ,
× RELATED அரசு ஊழியருக்கு தொந்தரவு ஓய்வு எஸ்.ஐ மீது வழக்கு பதிவு