×

கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரி மருத்துவமனை 13 இணை பேராசிரியர்களின் இடமாற்ற உத்தரவு ரத்து: மத்திய நிர்வாக தீர்ப்பாய சென்னை கிளை தீர்ப்பு

சென்னை: சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணை பேராசிரியர்கள் 13 பேரை பணியிட மாற்றம் செய்து ஒன்றிய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வு உத்தரவிட்டுள்ளது. சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் இணை ஆசிரியராக பணியாற்றி வரும் டாக்டர்கள் சுகபிரியா உள்ளிட்ட 13 மருத்துவர்களை இடமாற்றம் செய்து இஎஸ்ஐ கழகம் உத்தரவுகளை பிறப்பித்தது.

இந்த உத்தரவுகளை எதிர்த்து 13 இணை பேராசிரியர்களும் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் எம்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பி.வில்சன் மற்றும் ஜி.சங்கரன் ஆகியோர், கடந்த 2022ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பணியிட மாறுதல் கொள்கை நடைமுறைகளை பின்பற்றாமல், இடமாற்றம் செய்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இது விதிகளுக்கு முரணானது என்று வாதிட்டனர். ஒன்றிய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜரானார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம், . 13 இணை பேராசிரியர்களின் இடமாறுதல் உத்தரவுகள் ரத்து செய்யப்படுகிறது. இடமாறுதல் செய்யப்பட்ட பகுதிகளில் பணிக்கு சேராததை காரணம் காட்டி எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று உத்தரவிட்டார்.

The post கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரி மருத்துவமனை 13 இணை பேராசிரியர்களின் இடமாற்ற உத்தரவு ரத்து: மத்திய நிர்வாக தீர்ப்பாய சென்னை கிளை தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : KK Nagar ESI Medical College Hospital ,Central Administrative Tribunal ,Chennai ,ESI ,KK Nagar ,Union Government ,Medical College Hospital ,KK Nagar… ,Dinakaran ,
× RELATED ஆட்டிசம் குறையால் பாதிக்கப்பட்ட மகனை...