×

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவரான கபில் சிபலுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை:. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூத்த வழக்கரைஞர் கபில்சிபலுக்கு வாழ்த்துகள். வழக்கறிஞர்கள் சங்கத்தின் சுதந்திரமும் நமது அரசியலமைப்பின் மாண்புகளும் பாதுகாப்பான கரங்களில் இருப்பதை அவரது வெற்றி உறுதிப்படுத்தியுள்ளது. நீதியையும் இந்திய மக்கள் மிகவும் போற்றும் மக்களாட்சி விழுமியங்களையும் உயர்த்திப் பிடிக்கும் வகையில் கபில்சிபல் தலைமை அமையும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவரான கபில் சிபலுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : M. K. Stalin ,Supreme Court Bar Association ,President ,Kapil Sibal ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Supreme Court Lawyers Association ,Bar Association ,M.K.Stal ,
× RELATED உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவராக...