×

இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச விசாரணையை மோடி அரசு தடுக்கிறது: திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு

சென்னை: .மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சென்னையில் நேற்று அளித்த பேட்டி: 2009 மே 17ம் தேதி இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை அரசினால் ஈழத்தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நாள். 70,000 தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டார்கள். முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பாக, இலங்கைக்கு எதிரான விசாரணையை தடுத்து நிறுத்தியது மோடி அரசு தான்.

10 ஆண்டுகள் ஆட்சியில் உள்ள மோடி அரசு, இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணையை ஏன் தடுக்கிறது. முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையை தமிழர்கள் இன்னும் மறக்கவில்லை. முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக, வருகிற ஞாயிற்றுக்கிழமை பெசன்ட் நகர் கடற்கரையில் சுடர் ஏந்தி அஞ்சலி செலுத்த இருக்கிறோம். தலைவர்கள் கட்சி பாகுபாடின்றி கலந்துகொள்ள வேண்டும்.

இலங்கை தமிழர்களை சித்ரவதைப்படுத்தும் இலங்கை அரசை கண்டிக்க தங்களுடன் இந்திய அரசு கைகோர்க்க வேண்டும். கருணா என்பவர் இலங்கை படையினருடன் சேர்ந்து ஈழத்தமிழர்களை படுகொலை செய்தவர். கருணா குழுவைச் சேர்ந்தவர்கள் சென்னைக்கு வந்திருந்தால் அவரை தமிழக காவல்துறை கைது செய்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், பேராசிரியர் குழந்தை ஆகியோர் உடனிருந்தனர்.

The post இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச விசாரணையை மோடி அரசு தடுக்கிறது: திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Modi ,Thirumurugan ,Chennai ,Thirumurugan Gandhi ,May Seventeen Movement ,Sri Lankan government ,Elamites ,Mullivaikal ,Sri Lanka ,Tamils ,Mullivaikal.… ,Modi Government ,Dinakaran ,
× RELATED மோடி கன்னியாகுமரி வருகை; சென்னை...