×

விளையாட்டு விடுதி மாணவர்கள் சேர்க்கைக்கான மாநில அளவிலான தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதி மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான மாநில அளவிலான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதி மாணவ, மாணவியர்கள் சேர்க்கைக்கான மாநில அளவிலான தேர்வுகள் வரும் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை அறிவிப்பினை தொடர்ந்து, இத்தேர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநில அளவிலான தேர்வுகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post விளையாட்டு விடுதி மாணவர்கள் சேர்க்கைக்கான மாநில அளவிலான தேர்வுகள் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sports Development Authority ,Tamil Nadu Sports Development Authority ,Tamil Nadu Sports Development Authority Sports Hostel ,Sports Hostel ,
× RELATED திண்டுக்கல்லில் விளையாட்டு...