×

கன்னியாகுமரி அருகே தீ விபத்து; கரும்புகை சூழ்ந்து கண் எரிச்சல்: வாகன ஓட்டிகள் அவதி


நாகர்கோவில்: கன்னியாகுமரி முருகன்குன்றம் அருகே நேற்று மாலை திடீரென குப்பையில் தீ பிடித்தது. நேரம் செல்ல, செல்ல தீயின் வேகம் அதிகரித்தது. அந்த பகுதியில் குப்பைகள் மட்டுமின்றி உடைந்து போன படகுகள் உள்ளிட்ட பல்வேறு உடைந்த இயந்திர பொருட்களும் கிடந்தன. இதனால் அந்த பகுதி முழுவதுமே புகை மண்டலம் சூழ்ந்தது. கரும் புகை வெளியானது. இது குறித்து உடனடியாக கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் சென்று சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

கரும்புகை காரணமாக அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களுக்கு கண் எரிச்சலும் ஏற்பட்டது. இந்த தீ விபத்துக்கான காரணம் தெரிய வில்லை. வெறும் குப்பைகள் மட்டும் கிடந்தால், இவ்வளவு கரும்புகை ஏற்பட்டு இருக்காது. பல்வேறு இடங்களில் இருந்து கழிவு பொருட்களை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இதன் காரணமாகவே கரும்புகை வெளியானதாக அந்த பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்தனர்.

The post கன்னியாகுமரி அருகே தீ விபத்து; கரும்புகை சூழ்ந்து கண் எரிச்சல்: வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Nagercoil ,Murugankunram ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி – நாகர்கோவில் சாலையில்...