×

கனமழை எச்சரிக்கை: நெல்லை, குமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படை தயார்!!

நெல்லை: தமிழ்நாட்டில் 4 நாட்கள் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து மாநில பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நெல்லை, குமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். நெல்லை, குமரி, நீலகிரிக்கு 300 வீரர்கள் கொண்ட தலா 3 குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. கோவையில் 30 வீரர்களை கொண்ட ஒரு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். தேவைப்பட்டால் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

The post கனமழை எச்சரிக்கை: நெல்லை, குமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படை தயார்!! appeared first on Dinakaran.

Tags : State Disaster Response Force ,Nellai ,Kumari ,Nilgiris ,Coimbatore ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாநில...