×

3வது முறையாக ஆட்சியமைத்தால் 100 நாட்கள் அல்ல 125 நாட்களுக்கான திட்டம் தயார்: பிரதமர் மோடி பேட்டி

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தல் பிரசாரங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி, தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘மூன்றாவது முறையாக எங்களது கட்சி ஆட்சி அமைக்கும். அப்போது முதல் 100 நாட்களுக்கான திட்டம் வகுக்கப்படவில்லை. மாறாக 125 நாட்களுக்கான திட்டத்தை தயார் செய்து வைத்துள்ளோம். கூடுதலாக சேர்க்கப்பட்ட இருபத்தைந்து நாட்களும் இளைஞர்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதாக இருக்கும்.
ஊழல்வாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை, ஏழைகளுக்கு திருப்பி அளிக்கும் வகையில், புதிய சட்டத்தை உருவாக்க ஆலோசனை நடத்தி வருகிறோம். எங்களது கட்சியினர் தாமரைக்காக (பாஜக சின்னம்) உழைக்கின்றனர். எதிர்க்கட்சிகளும் தாமரைக்காக உழைக்கின்றன. ஏனென்றால், அவர்கள் எங்களது மீது சேற்றை வாரி வீசுகின்றனர்.

அதனால் அதிகமாக தாமரை மலரும். தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு சாதகமாக செயல்படுவதாக கூறுகின்றனர். கிட்டத்தட்ட 56 ஆண்டுகளாக தேர்தல் ஆணையம் ஒருவரால் தலைமை தாங்கப்பட்டது. அந்த நபர் மாநில ஆளுநர் அல்லது எம்பியாக இருந்தார். எல்.கே.அத்வானிக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டார். தேர்தல் ஆணையம் சுதந்திரமானது. பொது சிவில் சட்டத்தால், ஒரே தேசம், ஒரே உடை, ஒரே மொழி, ஒரே தலைவர் வரும் என்கின்றனர். கோவாவில் பொது சிவில் சட்டம் உள்ளது. அங்குள்ள மக்கள், ஒரே மாதிரியான ஆடைகளை அணிகிறார்களா? அவர்கள் ஒரே மாதிரியான உணவை சாப்பிடுகிறார்களா? ெபாது சிவில் சட்டத்தை கொண்டு வர ஏற்கனவே பலமுறை உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டோம். அரசியல் நிர்ணய சபையின் அடிப்படை கோட்பாடுகளுக்காக போராடுவேன். அதற்காக என் உயிரையும் தியாகம் செய்வேன்’ என்றார்.

 

The post 3வது முறையாக ஆட்சியமைத்தால் 100 நாட்கள் அல்ல 125 நாட்களுக்கான திட்டம் தயார்: பிரதமர் மோடி பேட்டி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,New Delhi ,Modi ,Dinakaran ,
× RELATED மருத்துவமனை, பொது இடங்களில் தீ...