- கெஜ்ரிவால்
- சுவாதி
- புது தில்லி
- டெல்லி பொலிஸ்
- ஆம் ஆத்மி
- ஆம் ஆத்மி கட்சி
- ராஜ்ய சபா
- ஜனாதிபதி
- பெண்களுக்கான தில்லி ஆணையம்
- சுவாதி மாலிவால்
- தில்லி
- முதல் அமைச்சர்
- அரவிந்த்
புதுடெல்லி: ஆம்ஆத்மி பெண் எம்பி மீது தாக்குதல் நடந்த விவகாரத்தில் கெஜ்ரிவாலின் உதவியாளர் மீது டெல்லி போலீஸ் வழக்குபதிவு செய்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பியும், டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவருமான சுவாதி மாலிவால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில், அவரது உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சுவாதி மாலிவால் கடந்த 13ம் தேதி டெல்லி போலீசிடம் போன் மூலம் முறையிட்டார். இவ்விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தேசிய மகளிர் ஆணையம் குற்றம்சாட்டப்பட்ட பிபவ் குமாருக்கு எதிராக சம்மன் அனுப்பி ஆஜராக உத்தரவிட்டது.
முன்னதாக நேற்று மாலை, போலீஸ் உதவி கமிஷனர் பி.எஸ். குஷ்வாஹா தலைமையிலான இரண்டு பேர் கொண்ட போலீசார், சுவாமி மாலிவாலின் வீட்டிற்கு நேரில் சென்று அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர். கிட்டதட்ட நான்கு மணி அவரிடம் வாக்குமூலம் பெற்றனர். கிட்டத்தட்ட 4 நாட்களுக்கு பின்னர், டெல்லி போலீசார் பிபவ் குமாருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். இதற்கிடையே நேற்று நள்ளிரவு மருத்துவ பரிசோதனைக்கு சுவாதி மாலிவாலை போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
The post ஆம்ஆத்மி பெண் எம்பி மீது தாக்குதல் கெஜ்ரிவாலின் உதவியாளர் மீது வழக்கு: நள்ளிரவில் சுவாதிக்கு மருத்துவ சோதனை appeared first on Dinakaran.