×

டிஜெஎஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள்: கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் பாராட்டு

திருவள்ளூர்: டிஜெஎஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளதால், இந்த கல்வி குழுமத்தின் தலைவர் டி.ஜெ. கோவிந்தராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், பெருவாயல் பகுதியில் உள்ள டி.ஜெ.எஸ் நகரில் டிஜெஎஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி அமைந்துள்ளது. இங்கு 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவிகள் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

இந்நிலையில், மாணவி எம்.லினைஷா 500க்கு 473 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அதேபோல், மாணவி ஜான்வி சிங் 500க்கு 469 எடுத்து பள்ளி அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மேலும், எம்.வேணு பிரியா 500க்கு 437 மதிப்பெண்கள் எடுத்து 3ம் இடம் பிடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்த மாணவிகளையும், இதற்கு காரணமான ஆசிரியர்களையும் டிஜெஎஸ் கல்வி குழுமத்தின் தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ, தாளாளர் டி.ஜெ.ஜி.தமிழரசன், முதல்வர் அசோக், நிர்வாக அலுவலர் ஏழுமலை ஆகியோர் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.

 

The post டிஜெஎஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள்: கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : DJS Public CBSE School ,Committee ,DJ Govindarajan ,Thiruvallur ,D.J. Govindarajan ,Thiruvallur district ,Kummidipoondi circle ,Peruvayal ,Dinakaran ,
× RELATED டிஜெஎஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில்...