×

இடிந்து விழும் நிலையில் ஊராட்சிமன்ற அலுவலகம்; அச்சத்தில் பன்பாக்கம் கிராம மக்கள்

கும்மிடிப்பூண்டி: பன்பாக்கத்தில் இடிந்துவிழும் நிலையில் உள்ள ஊராட்சிமன்ற அலுவலகத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித்தரவேண்டும் என அப்பகதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி அடுத்த பன்பாக்கம் ஊராட்சியில் குத்தானம்மேடு, பனப்பாக்கம், திரௌபதி அம்மன் கோயில் தெரு, குத்தாலமேடு, செல்லியம்மன் கோயில் தெரு, முதலியார் தெரு, செட்டியார் தெரு, பன்பாக்கம் ஆதி திராவிடர் பகுதி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வருகின்றனர். இந்த ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம், ரேஷன் கடை, ஆரம்ப தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி கட்டிடம், விஏஓ அலுவலகம், நூலக கட்டிடம், கிராம சேவை மையம் போன்றவை செயல்பட்டு வருகிறது. ஊராட்சி மன்ற அலுவலகம் கடந்த 1984ம் ஆண்டு கட்டப்பட்டது.

வர்தா புயல், தானே புயல், போன்ற இயற்கைசீற்றத்தின்போது கட்டிடம் சிதிலமடைந்து சுவர்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு தற்போது இழுந்துவிழும் நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்வதற்கு மாணவர்கள், பொதுமக்கள் அச்சப்படு கின்றனர். ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு வராமல் சாலையிலேயே ஊராட்சி தலைவரிடம் கோரிக்கை வைத்துவிட்டு செல்லும் நிலையுள்ளது. எப்போது இடிந்துவிழுமோ என்ற அச்சத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், ஊராட்சி செயலாளர் ஹரி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். எனவே, பெரிய ஆபத்து ஏற்படுவதற்குள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடித்துவிட்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டித்தர வேண்டுமென அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் திருவள்ளூர் கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 

The post இடிந்து விழும் நிலையில் ஊராட்சிமன்ற அலுவலகம்; அச்சத்தில் பன்பாக்கம் கிராம மக்கள் appeared first on Dinakaran.

Tags : Panchayat ,Kummidipoondi ,Abhagadi ,Panpakkam Panchayat ,Kuthanammedu ,Panapakkam ,Draupadi Amman Koil Street ,Kuthalamedu ,Chelliyamman Temple ,Dinakaran ,
× RELATED இரண்டாம் கட்டமாக இலங்கை மறுவாழ்வு...