×

யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு மே 31-ம் தேதி வரை நீதிமன்ற காவல்: கோவை நீதிமன்றம் உத்தரவு

கோவை: யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு மே 31-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரெட் பிக்ஸ் என்ற பெயரில் டிஜிட்டல் ஊடக நிறுவனம் நடத்தி வரும் பெலிக்ஸ் ஜெரால்ட் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு யூடியூபில் பிரபலமான சவுக்கு சங்கரை பேட்டி எடுத்து தனது youtube பக்கத்தில் வெளியிட்டார். அதில் சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்த நிலையில், அது எவ்வித தணிக்கையும் இன்றி வெளியிடப்பட்டது.

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்ட் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் யூடியூபர் சங்கர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சங்கர் தற்போது திருச்சி லால்குடி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி சிறையில் இருந்த யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் பெண் காவலர்கள் பாதுகாப்புடன் இன்று கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 5ல் நீதிபதி வி.எல் சந்தோஷ் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து நீதிபதி வி.எல் சந்தோஷ், பெலிக்ஸ் ஜெரால்டை மே 31ம் தேதி வரை நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். இதை அடுத்து பெண் காவலர்கள் பாதுகாப்புடன் பெலிக்ஸ் ஜெரால்ட் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

The post யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு மே 31-ம் தேதி வரை நீதிமன்ற காவல்: கோவை நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : YouTuber ,Felix Gerald ,Coimbatore ,Coimbatore court ,Red Pigs ,
× RELATED யூடியூபர் பெலிக்ஸ் பண்ணையில் சொகுசு கன்டெய்னர் சிக்கியது