×

ஆலிவ் எண்ணெய் பயன்கள்

நன்றி குங்குமம் தோழி

எண்ணெயில் பல வகைகள் இருந்தாலும் இதயத்துக்கு ஏற்ற மிகச் சிறந்த எண்ணெய் என்றால் அது ஆலிவ் எண்ணெய்தான். இந்த எண்ணெயை சமையலில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்.

*இதய நோயைத் தடுக்கும். ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுவதுடன் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவை குறைந்தால் இதய நோய் வருவது தடுக்கப்படும்.

*ஆலிவ் எண்ணெயில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம் உள்ளது. இது உடலில் இன்சுலின் அளவை சீராக பராமரித்து நீரிழிவிலிருந்து பாதுகாப்பு தரும். ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்த்து வந்தால் நீரிழிவு வருவதையும் தடுக்கலாம்.

*ஆலிவ் எண்ணெயில் ஆன்டி ஆக்ஸிடென்ட்டுகள் மற்றும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. இதிலுள்ள வைட்டமின் ஈ மிகவும் சக்தி வாய்ந்தது. இது புற்று நோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும்.

*உடலில் ரத்த ஓட்டத்தை சீராக வைக்க வைட்டமின் ஈ மிகவும் முக்கியமானது. ஆலிவ் எண்ணெயில் உள்ள விட்டமின் ஈ ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால் உடலானது பொலிவோடு அழகாக இருக்கும். மேலும் உறுப்புகளும் சீராக செயல்படும்.

*ஆலிவ் எண்ணெய் செரிமானம் சீராக நடைபெற உதவுவதால் மலச்சிக்கல் பிரச்னையிலிருந்து விடுபடலாம். மேலும் மன அழுத்தம் நீங்குவதோடு, எலும்புகளின் ஆரோக்கியமானது மேம்படும்.

*ஆலிவ் எண்ணெயில் மோனோ அன் சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம் உள்ளதால் அல்சைமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் தாக்காமல் தடுக்கும்.

*ஆலிவ் எண்ணெயில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, இதய நோய்கள் வராமல் தடுக்கும் பயோஃபீனால்கள் அதிகம் உள்ளதால் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு
தமனிகளில் கொழுப்புகள் படிவதையும் தடுத்து ரத்த ஓட்டத்தை சீராக்கும்.

– ச.லெட்சுமி, தென்காசி.

The post ஆலிவ் எண்ணெய் பயன்கள் appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,Dinakaran ,
× RELATED கோடையில் எடை இழப்புக்கு உதவும் சப்போட்டா!