×

வீட்டை இப்படி சுத்தம் செய்யலாம்!

நன்றி குங்குமம் தோழி

*வேப்பிலை, கல் உப்பு, எலுமிச்சைச் சாறு இவற்றுடன் நீரைக் கலந்து அரைத்து வடிகட்டி தரைகளை துடைத்தால் தரை சுத்தமாகி விடும். பூச்சிகள், கிருமிகள் வராது.

*தண்ணீரில் உப்பு கரைத்து மஞ்சள் பொடி கலந்து விட்டுத் தரைகளைத் துடைத்தால் சுத்தமாகிவிடும். புழு, பூச்சிகள், கிருமிகள் வராது.

*பூஜை அறையை நீருடன் சிறிது பன்னீர் சேர்த்து மெழுகினால் வாசனையாக இருக்கும்.

*அமோனியாவை சோப்பு நீரில் கலந்து கதவுகளை துடைத்தால் கரை, அழுக்கு நீங்கி விடும்.

*தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து தரையைத் துடைத்து மெழுகினால் பளிச்சென்று இருக்கும். மணமும் வீசும்.

– ஆர்.பத்மப்ரியா, திருச்சி.

The post வீட்டை இப்படி சுத்தம் செய்யலாம்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...