×

மூடப்பட்ட 26 மணல் குவாரிகளை திறக்கக் கூடாது: பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் சில மாதங்களுக்கு முன் மூடப்பட்ட 26 மணல் குவாரிகளை மீண்டும் திறப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மணல்குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்த கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்கள் மணல் குவாரிகளுக்கு நிரந்தரமாக தடை விதித்துள்ளன. எனவே கட்டுமானப் பணிகளுக்கு மணல் தேவை என்று கூறி மணல் குவாரிகளை மீண்டும், மீண்டும் திறக்கக்கூடாது. ஆறுகள் எனப்படுபவை இயற்கை அன்னை நமக்கு கொடுத்த கொடை. அவை வரம். அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும். மணல் குவாரிகள் என்ற பெயரில் ஆறுகளைச் சுரண்டி வரத்தை சாபமாக்கி விடக் கூடாது.

தமிழ்நாடு அரசும் நினைத்தால் வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதியை அதிகரிப்பது, செயற்கை மணல் உற்பத்தி ஆகியவற்றின் மூலம் தமிழகத்தின் மணல் தேவையை எளிதாக பூர்த்தி செய்யலாம். அதை விடுத்து மீண்டும், மீண்டும் மணல் குவாரிகளைத் திறப்பது தமிழ்நாட்டை, குறிப்பாக காவிரி பாசன மாவட்டங்களை நிரந்தர பாலைவனமாக மாற்றிவிடும். தமிழக அரசு அதன் பார்வையையும், கொள்கைகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும். தமிழகத்தின் இயற்கை வளம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தையும், மக்கள் நலனையும் பாதுகாக்கும் நோக்குடன் காவிரி டெல்டாவில் 26 மணல் குவாரிகளை மீண்டும் திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post மூடப்பட்ட 26 மணல் குவாரிகளை திறக்கக் கூடாது: பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : BJP ,President Anbumani ,Chennai ,B.M.K. ,President ,Anbumani ,Tamil Nadu government ,Tamil Nadu ,Kerala ,P.M.K. ,
× RELATED தேர்தல் முடிவுக்குப் பிறகு மேலே...