×

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: 16 வயது சிறுவன் மாயம்

தென்காசி: தென்காசி மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

குற்றாலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வெயில் காணப்பட்டது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து காணப்பட்ட நிலையில் நேற்றிரவு முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மழையும் பெய்தது

மேற்குத் தொடர்ச்சி மலை நீர்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

தொடர்ந்து பெய்துவரும் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. குற்றாலத்தில் தொடர்ந்து தடை நீடிப்பதால் சுற்றுலாப் பயணிகள் யாரும் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. அருவிப் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் அலறித்து ஓட்டம் பிடித்தனர்.

பழைய குற்றால அருவியில் குளித்து கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒருவர் அடித்து செல்லப்பட்டார். பழைய குற்றால அருவியில் குளித்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 16 வயது சிறுவன் அடித்துச் செல்லப்பட்டார். குற்றால அருவியில், வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டவரை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர், போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கில் சிக்கிய சிறுவனை தேடும் பனி தொடர்பாக குற்றாலத்தில் தென்காசி எஸ்பி நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

The post மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: 16 வயது சிறுவன் மாயம் appeared first on Dinakaran.

Tags : WESTERN CONTINUUM MOUNTAIN AREA ,TENKASI ,TENKASI MOUNTAINS ,Maine ,Mayam ,
× RELATED சட்டவிரோத செயல்கள்; ஒரே நாளில் 102 பேர்...