×

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கப்படும் : போக்குவரத்துத் துறை அறிவிப்பு

சென்னை : வரும் 23ம் தேதி முதல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு மார்க்கெட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி செய்து வருவதால் அவர்கள் திருவண்ணாமலை பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கப்படும் : போக்குவரத்துத் துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbed Bus Station ,Tiruvannamalai ,Department ,Chennai ,Transport Department ,Chennai Coimbed Bus Station ,Coimbed Market ,
× RELATED புதுச்சேரி-கடலூர் சாலையில் தடுப்பு...