டெல்லி; நான் யாரிடமாவது ஆதாயம் பெற்றிருந்ததாக நிரூபித்தால் என்னை தூக்கிலிடுங்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் மோடி பேசியதாவது; நாடாளுமன்றத்தில் ஜவஹர்லால் நேருவை டாட்டா, பிர்லாவுக்கு ஆதரவானவர் என விமர்சித்தார்கள். இப்போது நேரு குடும்பமே என்னை அம்பானி-அதானிக்கு ஆதரவானவர் என குற்றம் சாட்டுகிறது. சுதந்திர தின நிகழ்ச்சிக்கு விளையாட்டு வீரர்கள், சாதனையாளர்களை அழைத்திருந்தேன். சாதனையாளர்களை கவுரவிக்காமல் மதிப்பளிக்காமல் எப்படி இருக்க முடியும்? அப்படி செய்யாவிட்டால் எப்படி விஞ்ஞானிகளை உருவாக்க முடியும்? நான் யாரிடமாவது ஆதாயம் பெற்றிருந்ததாக நிரூபித்தால் என்னை தூக்கிலிடுங்கள்.
இந்த நாட்டுக்கு வளம் சேர்க்கக் கூடிய தொழிலதிபர்களை நான் மதிக்கிறேன். கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிலாளர்கள் குறித்து சம அளவில்தான் நான் அக்கறையும் கவலையும் கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் பணம், நிர்வாக திறன் படைத்தவர்களின் மூளை, தொழிலாளர்களின் கடினமான உழைப்பு ஆகிய அனைத்துமே அவசியமாகிறது. பாஜக ஆட்சியில் தேர்தல் ஆணையம் எப்போதும் சுதந்திரமாகத்தான் செயல்பட்டு வருகிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமலாக்கத்துறை பயனற்ற அமைப்பாக இருந்தது. ஆனால் தற்போது அமலாக்கத்துறை திறம்பட செயல்பட்டு வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.
The post நான் யாரிடமாவது ஆதாயம் பெற்றிருந்ததாக நிரூபித்தால் என்னை தூக்கிலிடுங்கள்: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.