×

மிக கனமழைக்கான எச்சரிக்கை: தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மிக கனமழைக்கான எச்சரிக்கையை அடுத்து காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார். காற்று, மழை, இடி, மின்னலின்போது மின்கம்பி, மின்மாற்றிகள் அருகே செல்ல வேண்டாம். இடி மின்னலின்போது மரங்களுக்கு அடியிலோ, வெளியிலோ நிற்க வேண்டாம். குளங்கள், ஆறுகள், ஏரிகளுக்கு குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ செல்ல வேண்டாம் என எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், மழை தொடர்பான அவசர உதவிக்கு 100 அல்லது 95141 44100 எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தூத்துக்குடி எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

The post மிக கனமழைக்கான எச்சரிக்கை: தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,Superintendent ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் ஏ.டி.எம். மையத்தில் இளைஞர் ஒருவர் கொள்ளை முயற்சி..!!