×

சென்னையில் இருந்து ஹஜ் பயணம்: குறைந்த கட்டணத்தில் 17 விமானங்கள் இயக்கம்

சென்னை: சென்னையில் இருந்து சவுதி அரேபியாவிற்கு ஹஜ் பயணம் மேற்கொள்ள 17 விமானங்கள் இயக்கப்பட உள்ளது. அடுத்த 2 மாதங்களில் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள குறைந்த கட்டணத்தில் விமானங்கள் இயக்கப்படுவதாக ஃபிளைடீல் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. ஹஜ் யாத்திரை செல்ல ஒரு வழி பயணத்திற்கு மட்டும் ரூ.26,000 கட்டணமாக ஃபிளைடீல் நிர்ணயித்துள்ளது. 326 பேர் அமரும் வகையில் 17 விமானங்கள் குறைந்த கட்டணத்தில் சென்னையில் இருந்து இயக்கப்படவுள்ளன. சென்னை – ஜட்டா, மதினா -சென்னைக்கு விமானம் இயக்கப்படுவதாக ஃபிளைடீல் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

The post சென்னையில் இருந்து ஹஜ் பயணம்: குறைந்த கட்டணத்தில் 17 விமானங்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Hajj ,Chennai ,Saudi Arabia ,Flydeal Airlines ,Haj ,
× RELATED ஹஜ் பயணத்தின் போது, கடும் வெப்பம், இணை...