×

ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதி பேலா திரிவேதி தலைமையிலான அமர்வில் ராஜேஷ் தாஸ் வழக்கு விசாரணைக்கு வந்தது. பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த ராஜேஷ் தாஸுக்கு விழுப்புரம் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்த நிலையில், சிறை தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

The post ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Rajesh Das ,Delhi ,DGP ,Justice ,Bela Trivedi ,
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்...