×
Saravana Stores

மலர் கண்காட்சியுடன் இன்று தொடங்கியது கொடைக்கானல் கோடை விழா..!

கொடைக்கானல்: மலர் கண்காட்சியுடன் கொடைக்கானல் கோடை விழா தொடங்கியது. புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் கோடை விழா மலர் கண்காட்சி தொடங்கியது. இன்று தொடங்கிய மலர் கண்காட்சி மே 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. கொடைக்கானல் பூங்காவில் உள்ள மலர்க்கண்காட்சியில் பல வகையான வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

பிராண்ட் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர் கண்காட்சியில் பூத்துக் குலுங்கும் மேரி கோல்ட், ரோஜா, லில்லியம், கேலண்டல்லா, சால்வியா, டெலிபினியம், பேன்சி உள்ளிட்ட லட்சக்கணக்கான மலர்கள் இடம்பித்துள்ளது. இதையொட்டி பூங்காவில் பூத்து குலுங்கும் கோடிக்கணக்கான மலர்களை காண சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இந்தாண்டுக்கான மலர் கண்காட்சி இன்று துவங்கி மே 26ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. வழக்கமாக மலர் கண்காட்சி 2 நாட்கள்தான் நடத்தப்படும். ஆனால் இந்தாண்டு 10 நாட்கள் நடத்தப்படவுள்ளன. இதற்காக ஏற்கனவே பூங்காவில் நடப்பட்ட பல லட்சம் மலர் நாற்றுகளில் தற்போது கோடிக்கணக்கான மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

சிறப்பம்சமாக சுற்றுலாப்பயணிகளை கவரும்விதமாக ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு நெருப்புக்கோழி, சேவல், மயில், மலர் வீடு, மலர் இதழ்கள் ஆகிய உருவங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மலர் கண்காட்சியில் 25,000 மலர்கள் காட்சிக்காக வைக்கப்பட உள்ளன. தனியார் பங்கேற்பாளர்களும் தங்களது மலர்களை பார்வைக்காக வைக்க உள்ளனர். மேலும் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக பூங்கா அலுவலகம் அருகே ‘ஐ லவ் கோடை’ என்று சால்வியா மலர்களால் செல்பி பாயிண்ட் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

மலர் கண்காட்சியுடன் கோடை விழாவும் நடைபெற இருப்பதால் கொடைக்கானலில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

The post மலர் கண்காட்சியுடன் இன்று தொடங்கியது கொடைக்கானல் கோடை விழா..! appeared first on Dinakaran.

Tags : Kodaikanal Summer Festival ,Kodaikanal ,Summer Festival Flower Show ,Kodaikanal Park ,
× RELATED கொடைக்கானல் வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்