×

சென்னையில் இருந்து இஸ்ரேலுக்கு 27 டன் வெடிமருந்துடன் சென்ற கப்பலுக்கு ஸ்பெயின் துறைமுகத்தில் நிறுத்த அனுமதி மறுப்பு

சென்னை: சென்னையில் இருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற கப்பலை தங்கள் நாட்டு துறைமுகத்தில் நிறுத்த ஸ்பெயின் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. டென்மார்க் கொடியுடன் 27 டன் வெடிமருந்து பொருட்களுடன் சென்னையில் இருந்து கப்பல் புறப்பட்டது.

மே 21ம் தேதி கார்டஜனா துறைமுகத்தில் கப்பலை நிறுத்த அனுமதி கோரப்பட்டதாக ஸ்பெயின் வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். ஆயுதம் ஏந்திய கப்பலுக்கு துறைமுகத்தில் இடம் ஒதுக்குமாறு ஸ்பெயினை கப்பல் கேப்டன் அணுகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் இருந்து இஸ்ரேலின் ஹைபா துறைமுகத்துக்கு கப்பல் செல்ல இருந்ததாகவும் ஸ்பெயின் தகவல் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு ஸ்பெயின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியையும் ஸ்பெயின் நிறுத்தி வைத்துள்ளது.

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அந்நாட்டுக்கு செல்லும் கப்பலுக்கு ஸ்பெயின் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதி செய்யக்கூடாது என்ற கொள்கையின் அடிப்படையில் கப்பலுக்கு ஸ்பெயின் அனுமதி மறுத்துள்ளது.

The post சென்னையில் இருந்து இஸ்ரேலுக்கு 27 டன் வெடிமருந்துடன் சென்ற கப்பலுக்கு ஸ்பெயின் துறைமுகத்தில் நிறுத்த அனுமதி மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Israel ,Spain ,Cartagena ,Spanish ,
× RELATED சென்னையில் இருந்து இஸ்ரேலுக்கு...