×

கட்டிட மேஸ்திரி வீட்டில் 10 கிராம் நகை திருட்டு

தர்மபுரி, மே 17: காரிமங்கலம் அருகே உள்ள கோடாளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (34). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று முன்தினம் அதேபகுதியில் ஒரு கட்டிடத்திற்கு வேலைக்கு சென்றார். மதியம் உணவு சாப்பிட வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 10 கிராம் தங்க செயின் திருடு போயிருந்தது. இதுகுறித்து வெங்கடேசன், காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கட்டிட மேஸ்திரி வீட்டில் 10 கிராம் நகை திருட்டு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Venkatesan ,Kodalammam Koil Street ,Karimangalam ,
× RELATED மோடிக்கு வாரணாசி மக்கள் வழங்கியதை விட...