×

போக்குவரத்து பாதிப்பு நாகப்பட்டினத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம் சிறப்பாக பணிபுரிந்த போலீஸ் அதிகாரிகளுக்கு சான்றிதழ்

நாகப்பட்டினம், மே 17: நாகப்பட்டினம் எஸ்பி அலுவலகத்தில் நடந்த மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகளுக்கு எஸ்பி ஹர்ஷ்சிங் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் எஸ்பி அலுவலகத்தில் நடந்தது. எஸ்பி ஹர்ஷ்சிங் தலைமை வகித்தார். மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், சாராயம்,கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்து விவாதம் நடத்தப்பட்டது. பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் நிலுவைகள் கேட்கப்பட்டது. நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டது.

இதன் பின்னர் மாவட்டத்தில் கொலை, திருட்டு மற்றும் போக்சோ வழக்குகளில் உள்ள சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை பெற்று கொடுத்த காவல் அதிகாரிகள், திருட்டு வழக்கில் ஈடுபட்டவர்களை கைது செய்தது, வழக்கில் தலைமறைவாக இருந்த எதிரிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியது மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது சிறப்பாகபணியாற்றியது போன்ற செயல்களில் ஈடுபட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு எஸ்பி ஹர்ஷ்சிங் நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

The post போக்குவரத்து பாதிப்பு நாகப்பட்டினத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம் சிறப்பாக பணிபுரிந்த போலீஸ் அதிகாரிகளுக்கு சான்றிதழ் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,SP ,Harsh Singh ,Nagapattinam SP ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம்