×

புதுகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பணி நடந்த நெடுஞ்சாலைகளின் தரம் குறித்து கோட்ட பொறியாளர்கள் ஆய்வு

புதுக்கோட்டை, மே 17: புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சாலைகளின் தரம் குறித்து நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் பல கிலோமீட்டர் தூரம் பல்வேறு ஊர்களில் ஏராளமான சாலை பணிகள் நடந்த வருகிறது . இதில் சில பணிகள் நடந்து முடிந்துள்ளது, சில பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில் சாலைகளின் தரம் குறித்து நேற்று ஆய்வு செய்யப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைத் துறையின் மதுரை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், திருச்சி கோட்டப் பொறியாளர் சேதுபதி ஆகியோர் தலைமையிலான பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட சாலைகளின் விவரம், மதிப்பீடு, அவற்றின் தன்மை, பராமரிப்பு, பயன்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

பின்னர், புதுக்கோட்டை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ரூ.5.45 கோடியில் மேற்கொள்ளப்பட்ட பரவெட்டி வயல் கிராமத்துக்கு செல்லக்கூடிய சாலை, ரூ.6.90 கோடியில் மேற்கொள்ளப்பட்ட பெருமாநாடு, கொன்னையூர் சாலை ஆகிய சாலைகளை அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, புதுக்கோட்டை நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் வேல்ராஜ், உதவிக்கோட்டப் பொறியாளர்கள் பூபதி, வீரமணி, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post புதுகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பணி நடந்த நெடுஞ்சாலைகளின் தரம் குறித்து கோட்ட பொறியாளர்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Budukai district ,Pudukkottai ,Pudukkottai district ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை...