×

அறந்தாங்கி பஸ் நிலையத்தில் குடிமகன்கள் அட்டகாசம்

அறந்தாங்கி, மே 17: புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரிய நகராட்சியாக அறந்தாங்கி நகராட்சி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அறந்தாங்கி அரசு பணிமணையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அறந்தாங்கி பஸ் ஸ்டாண்டிற்க்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பஸ் ஸ்டாண்டில் மது பிரியர்கள் மதுவை குடித்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் அங்கே அங்கே உள்ளாடைகளுடன் படுத்து விடுகின்றனர்.

பெண் பயணிகள் இருக்கும் இடத்தில் நின்று கொண்டு ஆபாசமாக பேசுகின்றனர். இதனால் போலீசார் அடிக்கடி பஸ் ஸ்டாண்டிற்க்கு ரோந்து வரவேண்டும். பயணிகள் அச்சம் இல்லாமல் பஸ் ஸ்டாண்டிற்க்கு வந்து செல்ல வழிவகை செய்யவேண்டும். மேலும் பஸ் ஸ்டாண்டில் கண்ட இடத்தில் அதாவது பள்ளி கல்லூரி செல்லும் மாணவிகள் நிற்க்கும் இடத்தில் மது,சிகரெட் குடிக்கும் நபர்கள் மீதும் பொது இடத்தில் சிறுநீர் கழிப்பிடம் செய்பவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அறந்தாங்கி பஸ் நிலையத்தில் குடிமகன்கள் அட்டகாசம் appeared first on Dinakaran.

Tags : Aranthangi ,Arantangi ,Arantangi Municipality ,Pudukottai district ,Aranthangi government ,
× RELATED அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக்...