×

உலக அமைதியை வலியுறுத்தி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, ஓவியப்போட்டி

தஞ்சாவூர், மே16: தஞ்சாவூர் மாவட்ட பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில் உலக அமைதி, ஒற்றுமை, மதநல்லிணக்கம், தன்னம்பிக்கை, உடல், மனம் ஆகியவற்றை பேணிக்காத்தல் ஆகியவற்றை வலியுறுத்தி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, நடனப்போட்டி நடைபெற்றது.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி தஞ்சாவூர் கீழவாசல் கொள்ளுப்பேட்டை தெருவில் உள்ள அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட பிரம்மகுமாரிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஞானசௌந்தரி தலைமை வகித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வழக்கறிஞர் அன்பரசன் பரிசு வழங்கினார். முன்னதாக சகோதரி சுமதி வரவேற்றார். நிகழ்ச்சியில் சகோதரர்கள் தமிழ்ச்செல்வன், பத்மநாபன், அன்பழகன், முரளி, கார்த்தி சகோதரிகள் கவிதா, மகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post உலக அமைதியை வலியுறுத்தி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, ஓவியப்போட்டி appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Thanjavur District Brahma Kumaris ,Dinakaran ,
× RELATED ஆற்றுப்பகுதியில் 22 டன் குப்பைகள்...