×

யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்ட் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய பெலிக்ஸ் ஜெரால்ட் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று நீதிபதி சக்திவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்முனியப்பராஜ், பெலிக்ஸ் ஜெரால்ட் கடந்த வாரம் கைது செய்யப்பட்டதால், அவரது முன் ஜாமீன் மனு காலாவதி ஆகிவிட்டது என்றார். இதை ஏற்ற நீதிபதி சக்திவேல், மனுதாரர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுவிட்டதால் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

The post யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் முன்ஜாமீன் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Felix Gerald ,Chennai ,Chawuk Shankar ,Swaku Shankar ,Felix Gerald Mujamin ,
× RELATED யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி