×

முஸ்லிம்களுக்கு தனி பட்ஜெட்டா? பிரதமர் மோடி பொய் பிரசாரம்: சரத்பவார் கடும் தாக்கு

நாசிக்: முஸ்லிம்களுக்கு பட்ஜெட்டில் 15 சதவீத தனி ஒதுக்கீடு செய்ய காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது என்று மோடி பொய் பிரசாரம் செய்கிறார் என்று சரத் பவார் கூறினார்.

தேசியவாத காங்கிரஸ்(சரத்சந்திர பவார் அணி) தலைவர் சரத்பவார் நேற்று கூறுகையில்,‘‘ பல்வேறு சாதி மற்றும் மதத்தினரிடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் வகையில் பேசும் முதல் நபர் பிரதமர் மோடி தான். அவரது பேச்சு அனைத்து சமூகத்தினரிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக பிரிவினையை தூண்டும் வகையில் உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது இந்துக்களுக்கு ஒரு பட்ஜெட்டும், முஸ்லிம்களுக்கு பட்ஜெட்டில் 15 சதவீத நிதியை ஒதுக்குவதற்கு திட்டமிட்டிருந்தனர் என்ற அவரது பேச்சு முட்டாள்தனமானது. இந்திய அரசியலமைப்பின் 112வது பிரிவின் படி ஒன்றிய அரசு ஒரு பட்ஜெட்டை மட்டுமே வெளியிட முடியும். மதம் மற்றும் ஜாதியின் அடிப்படையில் பட்ஜெட் போட முடியாது’’ என்றார்.

The post முஸ்லிம்களுக்கு தனி பட்ஜெட்டா? பிரதமர் மோடி பொய் பிரசாரம்: சரத்பவார் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Modi ,Sharad Pawar ,Nashik ,Congress ,Nationalist Congress ,Sharath Chandra Pawar ,Sarath Pawar ,Dinakaran ,
× RELATED முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் என்ன...