×

சாத்தூர் அருகே கார் மோதியதில் 3 பேர் படுகாயம்

சாத்தூர், மே 17: கார் மோதி நடந்து சென்ற 3 பேர் காயமடைந்தனர். சாத்தூர் அருகே உப்பத்தூர் தனியார் சிமென்ட் தொழிற்சாலையில் லாரிக்கு லோடு ஏற்றுவதற்காக திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த லாரி டிரைவர் ராஜேந்திரன்(57), ராஜா(57), லூர்துசாமி(47) ஆகியோர் வந்தனர். தொழிற்சாலையில் லாரியை நிறுத்தி விட்டு சாப்பிடுவதற்காக அருகே இருக்கும் ஹோட்டலுக்கு மூன்று பேரும் சாத்தூர் உப்பத்தூர் சாலையில் நடந்து சென்றனர்.

அப்போது பின்னால் வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து 3 பேர் மீதும் மோதியது. இதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் தாலுகா போலீசார் சிவகாசி ரத்தினம் நகரை சேர்ந்த அரசு மருத்துவர் ஜனனி(31) மீது வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post சாத்தூர் அருகே கார் மோதியதில் 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Chatur ,Lorry ,Rajendran ,Raja ,Lourtuswamy ,Trichy district ,Lalgudi ,Uppattur ,Chatur.… ,Dinakaran ,
× RELATED சாத்தூர் அருகே மழை இல்லாததால் கருகும் உளுந்து செடிகள்