×

பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

 

ஆண்டிபட்டி, மே 17: ஆண்டிபட்டி பேரூராட்சி 18-வது வார்டு கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் சாலை வசதி கழிவுநீர் வாய்க்கால், தெருவிளக்கு, குப்பைத்தொட்டி உள்ளிட்ட வசதிகள் சரிவர செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இது தொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விரைவில் வசதிகளை செய்துதர வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கிருந்த அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் உடனடியாக பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும், தேர்தல் விதிமுறைகள் முடிவுக்கு வந்தவுடன் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கள் பொதுமக்களிடம் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் ஆண்டிபட்டி பேரூராட்சியில வளாகத்தில் சிறிது நேரம் பணிகள் பாதிக்கப்பட்டது.

The post பேரூராட்சி அலுவலகம் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Andipatti ,Kondamanayakkanpatti ,Andipatti Municipality 18th Ward ,Dinakaran ,
× RELATED ஆண்டிபட்டி அருகே சாலை சீரமைப்பு பணியின் தரம் ஆய்வு