×

குடிநீர் தேவைக்காக அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறப்பு

 

உடுமலை, மே 17: தாராபுரம் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக அமராவதி அணையில் இருந்து நேற்று ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.அதன்படி நேற்று அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில்: வரும் 21-ம் தேதி வரை 5 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

முதல் 2 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 1000 கனஅடி வீதம் 172.80 மில்லியன் கனஅடியும்,பின்னர் 3 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 600 கனஅடி வீதம் 155.52 மில்லியன் கனஅடி நீரும் என மொத்தம் 328 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடப்படும் என்றனர். 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையில் நேற்று நீர்மட்டம் 39.50 அடியாக இருந்தது. 44 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.

The post குடிநீர் தேவைக்காக அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Amaravati dam ,Udumalai ,Tarapuram ,Tamil Nadu government ,Amaravati river ,Tirupur district ,
× RELATED அமராவதி ராஜவாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க கோரிக்கை