×

அதிக தேர்ச்சி சதவிகிதம் குமரானந்தபுரம் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு

 

திருப்பூர்,மே17: திருப்பூர் குமரானந்தபுரம் மாநகராட்சி உயர்நிலைபள்ளி 10ம் வகுப்பு பொது தேர்வில் அதிக சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இந்நிலையில்,பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் பள்ளி நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு 22 வது வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். 21வது வார்டு கவுன்சிலர் பத்மாவதி, முன்னாள் கவுன்சிலர் ஞானவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட கழக அவைத்தலைவர் நடராஜன், மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி ராஜேந்திரன்,காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நடராஜன், பரமசிவம், மாகாளியப்பன் மதிமுக நிர்வாகி ராஜமாணிக்கம்,தமாகா ராஜேஷ், லட்சுமணன், திராவிட பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தேர்ச்சி சதவீதம் அதிகரித்ததற்காக பள்ளி தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள், மாணவ- மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்பு வழங்கினர்.

 

The post அதிக தேர்ச்சி சதவிகிதம் குமரானந்தபுரம் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Kumaranandhapuram ,Tirupur ,Tirupur Kumaranandapuram Municipal Corporation High School ,Radhakrishnan ,kumaranandapuram ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம்