×

ரூ.18 லட்சம் செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

 

சிவகங்கை, மே 17: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2023 அக்டோபர் வரை காணாமல் போன மற்றும் திருடப்பட்ட செல்போன்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுக்கப்பட்டால், உரிய விபரம் பெற, மாவட்ட சைபர் செல் பிரிவிற்கு தகவல் தெரிவித்து பின் ஐஎம்இஐ டிரேசிங் போடப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது செல்போன் காணாமல் போனால் சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேசனிலேயே செல்போன் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு விரைந்து கண்டுபிடிக்கப்படுகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த மாதம் வரை காணாமல் போன ரூ.18,54,000 மதிப்புள்ள 104 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சிவகங்கை எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்றது. எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமை வகித்து செல்போன்களை உரியவர்களிடம ஒப்படைத்தார். சைபர் கிரைம் பிரிவு ஏடிஎஸ்பி நமச்சிவாயம் முன்னிலை வகித்தார். போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

The post ரூ.18 லட்சம் செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai district ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி...