×

சாலை ஓரத்தில் இடையூறு கருவேல மரங்கள் அகற்றம்

 

மண்டபம்,மே 17: மண்டபம் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கருவேல மரங்கள் ஜேசிபி உதவியுடன் அகற்றப்பட்டது. மண்டபம் பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும், கடலோரப் பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகளில் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் விதமாக இருபுறமும் கருவேலம் மரங்கள் வளர்ந்துள்ளது.

இந்த கருவேலம் மரங்கள் சாலைகளில் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் மீது மோதி காயத்தையும் மற்றும் விபத்தையும் ஏற்படுத்தியது. இதனால் பேரூராட்சி நிர்வாகம் சாலை ஓரங்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றுவதற்குநடவடிக்கை எடுத்து வந்தது.

அதன் ஒரு பகுதியாக வடக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள சாலையின் இருபுறமும் வளர்ந்துள்ள கருவேலம் மரங்களை ஜேசிபி மூலம் அகற்றும் பணிகள் நடைபெற்றது. இதுபோல பேரூராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட சாலைகளில் இருபுறமும் வளர்ந்துள்ள கருவேல மரங்கள் முழுவதும் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post சாலை ஓரத்தில் இடையூறு கருவேல மரங்கள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Mandapam ,JCP ,Mandapam Municipality ,Dinakaran ,
× RELATED மண்டபம் கடற்கரை பூங்காவில் பாம்பன்...