×

தொண்டியை குளிர்வித்த மழை

 

தொண்டி, மே 17: தொண்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதாலும், வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதாலும் வெப்பம் முற்றிலும் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. கோடை காலம் ஆரம்பம் முதல் கடுமையான வெயில் வாட்டி வந்தது. வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

பகல் நேரங்களில் வீட்டிலேயே முடங்கினர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக இரவு மற்றும் பகல் நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. வெப்பத்தினால் சிரமப்பட்ட மக்களுக்கு இந்த மழை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத்தில் அதிகமான மழை நேற்று தொண்டியில் பதிவாகியுள்ளது. வியாபாரிகள், கட்டிட தொழிலாளர்கள் உட்பட பொது மக்கள் இந்த குளிர்ச்சியால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post தொண்டியை குளிர்வித்த மழை appeared first on Dinakaran.

Tags : Thondi ,Dinakaran ,
× RELATED விதிமீறிய பயணங்களால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து