×

திருப்பரங்குன்றத்தில் மழையால் சரிந்த மரங்கள் அகற்றம்: மதுரை மாநகராட்சி நடவடிக்கை

 

திருப்பரங்குன்றம், மே 17: மதுரை மாநகராட்சி பகுதியான திருப்பரங்குன்றம், திருநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழையால் பல்வேறு பகுதிகளில் சாலையோர மரங்கள் சரிந்தன. ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் நிரம்பியது. இதனால் இப்பகுதிகளில் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து மண்டல தலைவர் சுவிதா விமல் உத்தரவின் பேரில், பாதிப்புகளை சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் தொடங்கினர்.

இதன்படி திருநகர் குமாரசாமி தெருவில் சாலையோரத்தில் வேரோடு சாய்ந்த மரத்தை அவர்கள் வெட்டி அகற்றினர். இதேபோல் தியாகாராஜர் கல்லூரி செல்லும் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியது. இந்த சுரங்கப்பாதை இதுபோன்ற நிலைக்கு ஆளாவது வழக்கமானது.

இந்த நேரங்களில் அரசுப்பேருந்து, மாநகராட்சி குப்பை லாரி, தனியார் வாகனங்கள் உள்ளிட்டவை மழை நீரில் சிக்கிக்கொள்ளும். இதையடுத்து சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதில் வாகனங்கள் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக சுரங்கப்பாதையின் இரு புறமும் அடைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post திருப்பரங்குன்றத்தில் மழையால் சரிந்த மரங்கள் அகற்றம்: மதுரை மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Thirupparangundaram ,Tiruparangundaram ,Thiruvanagar ,Thirunagar ,Madurai Municipality ,
× RELATED குன்றத்து கோயிலில் ரூ.14 லட்சத்தில் மெட்டல் டிடெக்டர் அமைப்பு