×

திருமங்கலம் அருகே ஓடும் வேனில் திடீர் தீ: பொருட்கள் எரிந்து நாசம்

 

திருமங்கலம், மே 17: மதுரை, ஆரப்பாளையத்தினை சேர்ந்தவர் ரமேஷ்பாபு(28). இவர் நேற்று மதுரையிலிருந்து மினி வேனில் கடைகளுக்கு தேவையான பலசரக்கு பொருட்களை ஏற்றிக்கொண்டு பேரையூர் சென்றார். திருமங்கலம் – ராஜபாளையம் ரோட்டில் புதுப்பட்டி பகுதியில் ஆயிரம்கண்ணுடையாள் கோயில் அருகே சென்ற போது இவரது வாகனத்தில் இருந்த பலசரக்கு பொருட்கள் திடீரென தீப்பற்றி எரியத்துவங்கின. பின்னால் வாகனங்களில் வந்த சிலர் இதனை கண்டு ரமேஷ்பாபுவிடம் கூறினர்.

இதையடுத்து அவர் வேனை நிறுத்தி கீழே குதித்தார். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் வேனில் பற்றிய தீயை அணைக்கப்பட்டது. இருப்பினும் வேனில் இருந்த கடைகளுக்கு சப்ளை செய்யவேண்டிய சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பலசரக்கு பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. மேலும், வேனின் தடுப்பு கட்டைகளும் கருகின. இது குறித்து ரமேஷ்பாபு கொடுத்த புகாரின் பேரில், திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருமங்கலம் அருகே ஓடும் வேனில் திடீர் தீ: பொருட்கள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,Ramesh Babu ,Arapalayam, Madurai ,Beraiyur ,Madurai ,Rajapalayam road ,Pudhupatti ,Ayarakannudayal temple ,
× RELATED திருமங்கலம் அருகே தடுப்புச்சுவரில் மோதி லாரி விபத்து