×

ஒடிசாவில் போஸ்டர் தகராறில் பாஜ தொண்டர் குத்தி கொலை

பெர்ஹாம்பூர்: ஒடிசாவில் போஸ்டர் ஓட்டுவதில் பிஜேடி கட்சி தொண்டர்களுடன் ஏற்பட்ட தகராறில் பாஜ தொண்டர் குத்தி கொல்லப்பட்டார்.6 பேர் படுகாயமடைந்தனர். ஒடிசா மாநிலம், பெர்ஹாம்பூர் மாவட்டத்தில் கள்ளிக்கோட் சட்டமன்ற தொகுதிக்கு வரும் 20ம் தேதி தேர்தல் நடக்கிறது.இந்த தொகுதியில் பிஜேடி சார்பில் சூர்யாமணி பைத்யாம் போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து மாஜி எம்எல்ஏ பூர்ண சந்தி சேத்தியை பாஜ நிறுத்தியுள்ளது.

இந்த தொகுதிக்கு உட்பட்ட  கிருஷ்ண சரணாப்பூர் என்ற கிராமத்தில் பாஜவினருக்கும், பிஜேடி கட்சி தொண்டர்களுக்கும் இடையே சிறு,சிறு பிரச்னைகள் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.
பாஜ தொண்டர்கள் கட்சி வேட்பாளரின் போஸ்டர்களை நேற்றுமுன்தினம் ஒட்டினர். அதற்கு பிஜேடி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து இரு தரப்பினரும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மோதி கொண்டனர். இதில், பாஜ, பிஜேடி கட்சிகளை சேர்ந்த 7 பேர் காயமடைந்தனர். அவர்களை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் திலீப் குமார் பஹானா(28) என்பவர் பலியானார். மீதி உள்ள நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

The post ஒடிசாவில் போஸ்டர் தகராறில் பாஜ தொண்டர் குத்தி கொலை appeared first on Dinakaran.

Tags : BJP ,Odisha ,Berhampur ,BJD ,Kallikode assembly ,Berhampur district ,
× RELATED ஓட்டு மெஷினை சேதப்படுத்திய விவகாரம்: ஒடிசா மாநில பாஜக எம்எல்ஏ கைது