×

11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் விஜயமங்கலம் பாரதி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

 

பெருந்துறை, மே 17: 11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், பெருந்துறை அடுத்த, விஜயமங்கலம் பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்கள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். இப்பள்ளி மாணவி சந்தியா அறிவியல் பிரிவில் 600-க்கு 590 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவன் ராகுல் 588 மதிப்பெண்ணும், மாணவி நவீனா 587 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணாக்கர்களையும், பயிற்சியளித்த ஆசிரியர்களையும், உறுதுணையாக இருந்த பெற்றோர்களையும் பள்ளி தாளாளர் மோகனாம்பாள் மற்றும் தலைவர் செந்தில்குமார் பாராட்டு தெரிவித்து பரிசளித்தனர்.

 

The post 11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் விஜயமங்கலம் பாரதி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Vijayamangalam Bharati School ,Perunthurai ,Vijayamangalam Bharati Matric Higher Secondary School ,Sandhya ,
× RELATED 11ம் வகுப்பு தேர்வில் சென்னிமலை கொங்கு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி