×

திண்டுக்கல் மாவட்டத்தில் 312 மிமீ மழை

 

திண்டுக்கல், மே 17: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது பல மணிநேரம் பெய்த மழையால் திண்டுக்கல், வேடசந்தூர், சாணார்பட்டி, நத்தம், கொடைரோடு உள்பட பல்வேறு பகுதி சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளில் மழைநீர் புகுந்தததால் மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகினர்.

திண்டுக்கல் நாகல் நகர் ரவுண்டானாவில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து ஆறு போல் சென்றது. இதனால் வாகனஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். திண்டுக்கல் கரூர் ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் 4 அடி உயரத்திற்கு தேங்கி நின்றது இதனால் வாகன ஓட்டிகள் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 312 மிமீ மழை பதிவாகி உள்ளது.

இதன் விபரம்: திண்டுக்கல் 53 மிமீ, கொடைக்கானல் (ரோஸ் கார்டன்) 10 மிமீ, பழநி 5.0 மிமீ, சத்திரப்பட்டி 4.0 மிமீ, நத்தம் 28.0 மிமீ, நிலக்கோட்டை 14.6 மிமீ, வேடசந்தூர் 85.7 மிமீ, புகையிலை ஸ்டேஷன் 85.7 மிமீ, காமாட்சிபுரம் 13.6 மிமீ, கொடைக்கானல் படகு 12.40 மிமீ மழை பெய்துள்ளது.

The post திண்டுக்கல் மாவட்டத்தில் 312 மிமீ மழை appeared first on Dinakaran.

Tags : Dindigul district ,Dindigul ,Dinakaran ,
× RELATED காதலித்து கர்ப்பமாக்கி கைவிட்ட...