×

திண்டுக்கல்லில் அன்னதானம் வழங்கல்

 

திண்டுக்கல், மே 17: திண்டுக்கல் நாகல் நகர் அருகேயுள்ள பாரதிபுரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சீரடி சாய் பாபா ஆலயம். இங்கு நாள்தோறும் பாபாவிற்கு பூஜைகள் நடப்பது வழக்கம். குறிப்பாக பாபாவிற்கு உகந்த நாளான வாரந்தோறும் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி நேற்று பாபாவிற்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் பாபாவிற்கு விபூதி அபிஷேகம் நடத்தினர். தொடர்ந்து அனைவருக்கும் காலையில் இட்லியும், மதியம் அன்னதானமும் வழங்கப்பட்டது. பின்னர் மாலையில் சிறப்பு பஜனையை தொடர்ந்து அனைவருக்கும் சப்பாத்தி வழங்கப்பட்டது.

The post திண்டுக்கல்லில் அன்னதானம் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Sri Seeradi Sai Baba Temple ,Bharathipuram ,Nagal Nagar Dindigul ,Baba ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும்...